கொரோனா வைரஸ் தொற்றினால் விமான பயணத்தில் புது சாதனை

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக சிறிய விமான சேவை நிறுவனமான எயார் டஹிடா நுயி உலகின் மிக நீண்ட தூரம் திட்டமிட்ட பயணிகள் விமானத்தை இயக்கி புதிய சாதனை படைத்துள்ளது.

தெற்கு பசுபிக்கின் பிரான்ஸ் கட்டுப்பாட்டு பொலநேசியாவில் டஹிட்டி தீவில் இருந்து டீ.என்.64 விமானம் 15,715 கிலோமீற்றர் இடைவிடாது பறந்து 15 மணி 45 நிமிடங்களில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸை அடைந்து இந்த சாதனையை படைத்துள்ளது.

இந்த விமானப் பயணம் வழக்கமாக லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தரித்து பயணத்தை தொடரும். ஆனால் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்க வான் பகுதியை மூடியதை அடுத்து தனது பயணத்தை நேரடியாக தொடர வேண்டி ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூர் ஏர்வைஸ் விமானமே நீண்ட தூர பயணிகள் விமானத்தை இயக்கிய சாதனையை இதுவரை படைத்துள்ளது. அது சிங்கப்பூரம் மற்றும் அமெரிக்காவின் நெவார்க் விமான நிலைத்திற்கு இடையே 15,343 கிலோமீற்றர் தூரம் பயணித்து வருகிறது.

Thu, 03/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை