தி/மூதூர் ஆலிம் சேனை இல்ல விளையாட்டு போட்டி; மல்லிகை இல்லம் சம்பியன்

தி- மூதூர் ஆலிம் சேனை வித்தியாலயத்தில் இடம் பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியில் மல்லிகை இல்லம் 188 புள்ளிகளைப் பெற்று இவ் வருடத்திற்கான சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

இவ் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி இவ் வித்தியாவய அதிபர் எம்.ஐ.ஏ.வாஜித் தலைமையில் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் கடந்த (05) வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

இப் போட்டியில் மல்லிகை (சிவப்பு) 188 புள்ளிகளைப் பெற்று முதவிடத்தையும் , அல்லி (நீலம்) 179, இரண்டாமிடத்தையும்,

முல்லை (பச்சை) 158 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மூதூர் வலயக் கல்வி பணிப்பாளர்

ஏ.எல்.எம்.காசிம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததோடு

அவர் தனதுரையில்:-

மூதூர் கல்வி வலயத்தில் ஆலிம் சேனை வித்தியாலயம் ஒரு கிராம புரத்தில் அமைந்துள்ள ஒரு கஷ்டப் பிரதேச பாடசாலையாகும் .

இப் பாடசாலையில் ஆண்டு 1-9 வரைக்கும் 191 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த மெய் வல்லுனர் போட்டியில் மாணவர்களின் 100 , 200 ,அஞ்சல் ஓட்டம், றில் கோலாட்டம் போன்றவை இப்பிரதேச பெற்றோர்களையும், பழைய மாணவர்களையும் என்னையும் மிகவும் கவர்ந்திருந்தன.

மற்றும் அதிபர் , பிரதி அதிபர் சிரேஷ்ட ஆசிரியர்கள் இளம் ஆசிரியர்கள் அவர்களின் ஒட்டுமொத்த அர்ப்பணிப்பு மாணவர்களின் ஊடாக திறமை வெளிக் கொணரப்பட்டுள்ளது.

இப் பாடசாலையில் கடந்த வருடம் ஆர்,அசீம் , என்.எம் ஆசிக் ஆகிய இருவரும் மாகாண தேசிய மட்டத்தில் தலைக்குமேல் பந்தெறிதல், சக்கர நாற்காலி 100 ஓட்டபோட்டியில் சான்றிதல்களும் பரிசில்களும் பெற்று இந் நிகழ்வின் போது வலயக் கல்வி பணிப்பாளரினால் பாராட்டப்பட்டனர்.

இறுதியில் இந் நிகழ்வில் சிறப்புற நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய இப் பிரதேச பாடசாலை அபிவிருத்தி சங்கம் பழைய மாணவர் ஒன்றியம் அனைத்து சங்கங்களின் ஒத்துழைப்புக்கு பிரதி அதிபர் ஏ.எம்.றகீம் நன்றி உரை நிகழ்த்தினார்.

திருமலை மாவட்ட விசேட நிருபர்

Wed, 03/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை