சூத்திரம் இருந்திருந்தால் எரிபொருள்களின் விலை குறைவடைந்திருக்கும்

எரிபொருள் சூத்திர மொன்று நடைமுறைப்படுத்தப்பட்டால் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை லீட்டருக்கு 20 ரூபா என்ற அளவில் குறையும் என்று முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர நேற்று கூறினார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி எரிபொருள் விலைகள் மீளாய்வு செய்யப்பட்டன. இதன் மூலம் பாவனையாளர்களுக்கு எரிபொருள் விலை குறைப்பின் அதிக பட்ச பயன்களைப் பெற முடிந்தது. உலக சந்தையில்  எரிபொருள் விலைகளை அனுசரித்து பாவனையாளர்களுக்கு அந்த நன்மை கிடைத்தது.

இந்நிலையில், தற்போது உலக சந்தையில் ஒரு பீப்பாய் எண்ணெய் 45 அமெரிக்க டொலர்களுக்கு விற்கப்படுகிறது. 2019 செப்டம்பரில் எரிபொருள் விலை ஒரு பீப்பாய் 65 அமெரிக்க டொலராக இருந்தது. எனவே, எரிபொருளுக்கான சூத்திரம் இப்போது நடைமுறையில் இருந்தால் எரிபொருள் விலை லீட்டருக்கு 20 ரூபாய் குறைந்திருக்கும் என்று முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

எரிபொருள் விலை குறைப்பின் பலனை பொது மக்களுக்கு வழங்காமல் இருப்பதன் மூலம் இந்த அரசாங்கம் மக்களுக்கு நிவாரணம் வழங்க விரும்பவில்லை என்பது தெரிவதாக முன்னாள் நிதி அமைச்சர் மேலும் கூறினார்.

Wed, 03/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை