இஸ்ரேலில் ஆண்டில் மூன்றாவது தேர்தல்

இஸ்ரேலில் ஓர் ஆண்டுகளுக்குள் மூன்றாவது பொதுத் தேர்தலில் மக்கள் நேற்று வாக்களித்தனர். தற்போதைய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலாக இது அமைந்துள்ளது.

கடந்த இரு தேர்தல்களிலும் நெதன்யா அல்லது அவரது பிரதான போட்டியாளரான பென்னி கான்ட்ஸ் கூட்டணி அரசொன்றை அமைப்பதற்கு போதுமான பெரும்பான்மையை பெறத் தவறிய நிலையிலேயே இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.

இதில் தன் மீதான ஊழல் குற்றச்சாட்டு வழக்கு விசாரணைக்கு வர இரண்டு வாரங்களுக்கு முன்னரே நெதன்யாகு இந்தத் தேர்தலுக்கு முகம்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தகுதிபெற்ற 6.4 மில்லியனர் வாக்காளர்களும் இஸ்ரேல் நேரப்படி நேற்று இரவு 10 மணி வரை தமது வாக்குகளை பதிவு செய்த நிலையில் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் இந்தத் தேர்தலிலும் இரு பிரதான கூட்டணிகளுக்கு இடையே நெருங்கிய போட்டி நிலவுவதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

Tue, 03/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை