நியூஸி. வீரர் பெர்குசனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னி நகரில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு விளையாடிய நியூஸிலாந்து வீரர் லூக்கி பெர்குசனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா – நியூஸிலாந்து அணிகள் மோதிய முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்தது. கொரோனா வைரஸ் காரணமாக ரசிகர்கள் இன்றி இந்தப் போட்டி நடந்தது. வீரர்கள் ஒருவருக்கொருவர் கை குலுக்கிக் கொள்ளவில்லை.

இந்தப் போட்டியில் விளையாடிய நியூஸிலாந்து வேகப்பந்து வீரர் பெர்குசன் தொண்டை வலியால் அவதிப்பட்டார். அவருக்கு கொரோனா அறிகுறி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சிட்னியில் உள்ள ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டார். 24 மணி நேரம் அவரை கண்காணித்து பரிசோதனைகள் செய்யப்பட்டது.

இந்த பரிசோதனை முடிவில் பெர்குசனுக்கு கொரோனா இல்லை என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் நேற்று அவுஸ்திரேலியாவில் இருந்து தனது சொந்த நாட்டுக்கு திரும்பினார்.

ஏற்கனவே அவுஸ்திரேலிய வீரர் ரிச்சர்ட்சன் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா இல்லை என்பது தெரியவந்தது.

Mon, 03/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை