ஊரடங்குச் சட்டம் வெள்ளிக்கிழமை வரை நீடிப்பு!

ஊரடங்குச் சட்டம் வெள்ளிக்கிழமை வரை நீடிப்பு!-Curfew Extended Until Friday 27 March

- மாவட்டங்களிடையே பயணிப்பது தடை
- விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி
- அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல இடமளிப்பு

கொழும்பு, கம்பஹா, பத்தளம் மாவட்டங்களிலும் வட மாகாணத்தின் 05 மாவட்டங்களிலும் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை (24) காலை 6.00 மணிக்கு நீக்கப்படும்.

இம்மாவட்டங்களில் நாளை (24) நண்பகல் 12.00 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதுடன், அது வெள்ளிக்கிழமை (27) காலை 6.00 மணி வரை அமுலில் இருக்கும்.

இம் மாவட்டங்களில் வெள்க்கிழமை (27) நண்பகல் 12.00 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும்.

ஏனைய மாவட்டங்களில் இன்று (23) பிற்பகல் 2.00 மணிக்கு ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படும். அது வியாழன் (26) காலை 6.00 மணிக்கு நீக்கப்படுவதுடன், அன்றைய தினம் நண்பகல் 12.00 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும்.

நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கிடையேயும் பயணங்கள் மேற்கொள்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டு சுற்றுப் பயணிகளை இடத்திற்கு இடம் அழைத்துச் செல்வதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் எந்த மாவட்டத்திலும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மரக்கறி வகைகளை கொண்டுசெல்வதற்கும் இடமளிக்கப்படும்.

விவசாய மற்றும் வர்த்தக துறைக்கு பொறுப்பான அமைச்சர் இப்பணிகளை முறையாக நிர்வகிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

Mon, 03/23/2020 - 12:57


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை