கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு முறையான வேலைத் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு முகங்கொடுப்பதற்கு அரச மற்றும் தனியார் சுகாதார பிரிவுகளுடன் கலந்துரையாடி அரசாங்கம் ஒரு முறையான வேலைத் திட்டத்தை தயாரிக்க வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கியமை அரசாங்கத்தின் சிறந்த நடவடிக்கை என்பதை சுட்டிக்காட்டியுள்ள ரணில் விக்கிரமசிங்க, கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு உடனடியாக தெளிவுபடுத்த வேண்டுமெனவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றிற்கு முகங்கொடுக்க அரச மற்றும் தனியார் சுகாதார பிரிவுகளுடன் கலந்துரையாடி அரசாங்கம் ஒரு முறையான வேலைத்திட்டத்தை  தயாரிக்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளும் இந்த வைரஸுக்கு முகங்கொடுக்க தமது சுகாதார வசதி போதுமானதாக இல்லை. இந் நிலையில் கொரோனா வைரஸ் தொற்றிற்கு முகங்கொடுக்க இலங்கையின் அரச மற்றும் தனியார் சுகாதார பிரிவுகளுடன் கலந்துரையாடி அரசாங்கம் ஒரு முறையான வேலைத்திட்டத்தை தயாரிக்க வேண்டும்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 03/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை