அல்-ஜாயா அணி சம்பியன்

கந்தளாய் பிரதேச செயலகத்தினால் வருடந்தோறும் நடாத்தப்பட்டு வரும் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி நடாத்தப்பட்டது.

இப்போட்டிகளின் இறுதிப்போட்டியில் அல்- ஜாயா விளையாட்டுக் கழகமும், கந்தளாய் ஜொலி போயிஸ் விளையாட்டுக் கழகமும் மோதின இறுதியில் 1:0 என்ற கோல் வித்தியாசத்தில் அல்- ஜாயா விளையாட்டுக் கழகம் கந்தளாய் பிரதேச சம்பியன் பட்டத்தை தமதாக்கி கொண்டது.

கந்தளாயில் அல்-ஜாயாவின் ஒன்பது ஜொலி போய்ஸ் விளையாட்டு கழகத்திற்கு எதிரான தொடர் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

கந்தளாய் தினகரன் நிருபர்

Thu, 03/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை