புத்தளம் மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்கு

கொச்சிக்கடை பிரதேசத்திலும் அமுல்

சுய தனிமைப்படுத்தலை முறையாக செயல்படுத்தும் நடவடிக்ைக

அத்தியாவசிய சேவைகளுக்கு எவ்வித தடையுமில்லை

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நேற்று மாலை 4.30 முதல் புத்தளம் மாவட்டத்திலும் நீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்திலும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய புத்தளம் மாவட்டத்தின் புத்தளம், ஆனமடுவ, கற்பிட்டி, கருவலகஸ்வெவ, சிலாபம், நவகத்தேகம, பள்ளம, வண்ணாத்திவில்லு, உடப்பு, நுரைச்சோலை,சாலியவெவ ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கும் சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கொட்டுவ, கொஸ்வத்த, மாதம்பே, மாரவில, வென்னப்புவ ஆரச்சிக்கட்டுவ ஆகிய பிரதேசங்களுக்கும் நீர்கொழும்பில் கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்குமே நேற்று மாலை முதல் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

எனினும் வேட்புமனு தாக்கல் செய்வோர் மற்றும் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்போர் இப்பிரதேசங்களுக்கூடாக தமது போக்குவரத்தை முன்னெடுக்க முடியுமென்றும் பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் இத்தாலி உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் அதிகமாக தங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

சுயதனிமைப்படுத்தலை முறையாக செயற்படுத்தும் வகையிலும் ஆள்நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கிலும் இப்பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிட த்தக்கது.

வௌிநாடுகளில் இருந்து வந்து புத்தளம்,சிலாபம் மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் தங்கயுள்ள அநேகர் சுய தனிமைப்படுத்தல் செயற்பாடுகளில் பங்கேற்காது தலைமறைவாகி வருவதாக விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.சிலர் வீடுகளை மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளதாகவும் சிலர் களியாட்டங்களில் கலந்து கொள்வதோடு பல்வேறு இடங்களுக்கு சென்று வருவதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.சிலர் மைதானங்களில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதாகவும் அறிய வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார தரப்பு எச்சரித்துள்ளது.

இத்தாலியில் இருந்து வந்த 800 ற்கும் அதிகமானவர்கள் புத்தளம் மாவட்டத்தில் தங்கியுள்ளதாக ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியிலும் சுட்டிக்காட்டப்பட்டது.சுய தனிமைப்படுத்தலுக்கு அவர்கள் பங்களிக்காதது குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியாவது இதனை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் யோசனை முன்வைக்கப்பட்டது. கடுமையான முடிவுகளை எடுக்கவும் இதன் போது யோசனை தெரவிக்கப்பட்டது. இந்த நிலையிலே நேற்று ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இக்காலப்பகுதியில் வௌியிடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் சுயதனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்காதோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர். இந்த ஊரடங்கு சட்டம் எத்தனை நாட்கள் இது நீடிக்கப்படும் என இதுவரை அறிவிக்கப்படவில்லை.

 

Thu, 03/19/2020 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக