மலையகத்தில் குளிருடன் வரட்சி; தேயிலை செடிகள் கருகும் அவலம்

மலையகத்தில் நிலவும் வரட்சியான காலநிலையால் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் தொழில் மற்றும் குடும்ப வருமானம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிகாலையில் கடும் குளிருடன் அதிக பனி பொழிவதால் தேயிலைச் செடிகள் கருகியுள்ளன.

இதனால் தேயிலை கொழுந்தின் விளைச்சல்களும் குறைவடைந்துள்ளன.

தோட்ட நிர்வாகத்தால் கடந்த காலங்களில் வாரத்தில் 7 நாட்கள் தொழில் வழங்கப் பட்ட நிலையில்,வரட்சி காரணமாக 03 அல்லது 04 நாட்கள் மாத்திரமே வேலை வழங்கப்படுகின்றன.

இதனால் வருமானம் குறைந்து குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாத இக்கட்டான நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

டயகம நிருபர்

Thu, 03/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை