மஹர ஜும்ஆப் பள்ளி விவகாரம்; புத்தர் சிலையை அகற்ற சிறைச்சாலை ஆணையருக்கு பணிப்பு

மஹர ஜும்ஆ பள்ளிவாசலில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றுமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தம்மிடம் கூறியதாக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றி நேற்று தெரிவித்தார்.  

மஹர சிறைச்சாலை வளாகத்தில் இருக்கும் இப்பள்ளிவாசலில் அப்பிரதேச முஸ்லிம்கள் பல தசாப்த காலமாக ஐவேளைத் தொழுகையிலும் ஜும்ஆ தொழுகையிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.  

என்றாலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து இப்பள்ளிவாசல் மூடப்பட்டிருந்தது. இவ்வாறான சூழலில் தான் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இப்பள்ளிவாசலை ஓய்வு இடமாக பாவிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று தெரிய வருகிறது.    

Wed, 03/04/2020 - 09:13


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை