ஈராக்கில் ரொக்கெட் தாக்குதல்: மூன்று கூட்டுப்படை வீரர்கள் பலி

ஈராக்கில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் துருப்புகள் நிலைகொண்டுள்ள இராணுவத் தளம் மீது நடத்தப்பட்ட ரொக்கெட் குண்டு தாக்குதல்களில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

வடக்கு பக்தாதில் இருக்கும் டாஜி இராணுவ முகாம் மீது இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் குறைந்தது 12 பேர் காயமடைந்தனர்.

இதில் அமெரிக்கப் படை வீரர் ஒருவர், அமெரிக்க ஒப்பந்ததாரர் மற்றும் பிரிட்டன் படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக அமெரிக்க இராணுவ வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

அமெரிக்க இராணுவ தளபதி காசிம் சுலைமானி கடந்த ஜனவரியில் அமெரிக்க அளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டது தொடக்கம் பதற்ற சூழல் நீடிக்கிறது.

இதற்கு பதிலடியாக கடந்த ஜனவரி 8 ஆம் திகதி ஈராக்கில் இருக்கும் அமெரிக்க துருப்புகள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 100க்கும் அதிகமான அமெரிக்க துருப்புகள் அதிர்ச்சியால் மூளைக் காயத்திற்கு உள்ளாகினர்.

இந்நிலையில் இராணுத் தளம் மீது 18 ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டதாகவும் மூன்று கூட்டுப்படையினர் கொல்லப்பட்டதாகவும் ஈராக் மற்றும் சிரியாவின் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை தெரிவித்துள்ளது.

Fri, 03/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை