சவூதி அரேபியாவில் பள்ளிவாசல்கள் பூட்டு

மக்கா மற்றும் மதீனாவில் இரு புனித பள்ளிவாசல்கள் தவிர்த்து நாடெங்கும் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் எல்லா வகையான கூட்டுத் தொழுகைகளையும் சவூதி அரேபியா இடைநிறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தவிர்ப்பதற்கு பள்ளிவாசல்களை விட வீடுகளில் தொழுதுகொள்ளும்படி நாட்டு மக்களுக்கு சவூதி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை வெளியான அறிவிப்பில், வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை உட்பட அனைத்து கூட்டுத் தொழுகைகளையும் இடைநிறுத்துவதற்கு மத ரீதியில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் மக்கா மற்றும் மதீனாவின் இரு புனித பள்ளிவாசல்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

“பள்ளிவாசல் கதவுகள் தற்காலிகமாக மூடப்படும் ஆனால் தொழுகைக்கான அழைப்புக்கு அனுமதி அளிக்கப்படும்” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அழைப்பில் ‘தொழுகைக்கு வாருங்கள்’ என்ற பதத்திற்கு பதில் ‘வீட்டில் தொழுதுகொள்ளுங்கள்’ என்ற பதத்தை பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருக்கும் இடத்திலேயே தொழுதுகொள்ளும்படியும் இதற்கு அர்த்தம் கொள்ளப்படுகிறது.

சவூதி அரேபியாவில் 171 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Thu, 03/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை