இத்தாலியில் ஒரு நாளில் 919 பேர் மரணம்; உலகில் 6 இலட்சம் பேருக்கு தொற்று

இத்தாலியில் ஒரு நாளில் 919 பேர் மரணம்; உலகில் 6 இலட்சம் பேருக்கு தொற்று-Worlwide Nearly 600,000 COVID-19 Patients-24Hr 919 Dead in Italy

- இத்தாலியில் 9,134 பேர் பலி
- உலகளாவிய ரீதியில் 27,360 பேர் மரணம்
- சுமார் 6 இலட்சம் கொரோனா நோயாளிகள் உலகில்
- நோயாளிகள் எண்ணிக்கையில் முதல் இரு இடங்களில் அமெரிக்கா, சீனா
- அமெரிக்காவில் 104,463; இத்தாலியில் 86,498 பேருக்கு தொற்று!
131,708 பேர் குணமடைந்துள்ளனர்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒரே நாளில் இத்தாலியில் 919 பேர் மரணமடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நாடுகளின் பட்டியலில் அமெரிக்க முதலிடத்திலும், இத்தாலி இரண்டாம் இடத்திற்கும் முன்னேறியுள்ளன.

அமெரிக்காவில் இது வரை அமெரிக்காவில் 104,463 பேருக்கும், இத்தாலியில் 86,498 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

சீனாவில் அதற்கு அடுத்தபடியாக 81,933 பேரே இது வரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். ஆயினும் அங்கு 75,091 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 3,299 பேர் பலியாகியுள்ளனர்.

மரண எண்ணிக்கையில் இத்தாலி தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. அங்கு 9,134 பேர் மரணமடைந்துள்ளனர். 10,950 பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் தற்போது வரை 1,702 பேர் மரணமடைந்துள்ளதோடு, 890 பேர் குணமடைந்துள்ளனர்.

ஸ்பெயினில் 5,138 பேர், ஈரானில் 2,378 பேர், பிரான்ஸில் 1,995 பேர் மரணமடைந்துள்ளனர்.

அந்த வகையில் தற்போது கொரோனா வைரஸின் தொற்றுக்குள்ளானவர்களின் உலகளாவிய எண்ணிக்கை சுமார் 6 இலட்சத்தை நோக்கி நகர்கின்றது. தற்போது 597,072 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

இதில் 131,708 பேர் குணமடைந்துள்ளனர்.

உலகளாவிய ரீதியில் மரண எண்ணிக்கை 27,360 ஆக பதிவாகியுள்ளது.

கொரோனா தொற்று உலகளாவிய ரீதியில்
ஜனவரி 22 - 580 பேர்
மார்ச் 06 - 102,050 பேர்
மார்ச் 18 - 218,822 பேர்
மார்ச் 21 - 305, 036 பேர்
மார்ச் 24 - 422,574 பேர்
மார்ச் 27 - 532,788 பேர்
மார்ச் 28 - 597,072 பேர்

இத்தாலியில் - 9,134  பேர் மரணம்
- கடந்த 24 மணித்தியாலங்களில் 919பேர் பலி
- 86,498 பேருக்கு தொற்று
- 10,950 பேர் குணமடைவு

சீனாவில் - 3,299 பேர் மரணம்
- 81,933 பேருக்கு தொற்று
- 75,098 பேர் குணமடைவு

ஈரானில் - 2,378 பேர் மரணம்
- 32,332 பேருக்கு தொற்று
- 11,133 பேர் குணமடைவு

ஸ்பெயினில் - 5,138 பேர் மரணம்
- 65,719 பேருக்கு தொற்று
- 9,357 பேர் குணமடைவு

அமெரிக்காவில் - 1,706 பேர் மரணம்
- 104,463 பேருக்கு தொற்று
- 890 பேர் குணமடைவு
(3/28/2020 8:06am)

Sat, 03/28/2020 - 09:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை