சீனாவை விஞ்சிய அமெரிக்கா; சுமார் 86 ஆயிரம் பேருக்கு கொரோனா

சீனாவை விஞ்சிய அமெரிக்கா; சுமார் 86 ஆயிரம் பேருக்கு கொரோனா-COVID19-USA Over take China-Total Identified Cases Increased Up to 85k

- உலகில் 5 இலட்சத்தைக் கடந்த கொரோனா நோயாளிகள்
- உலகளாவிய ரீதியில் 24,077 பேர் மரணம்
- 122,672 பேர் குணமடைந்துள்ளனர்
- இத்தாலியில் 8,215 பேர் பலி
- சீனாவில் 3,291 பேர் பலி; 74,181 பேர் குணமடைவு

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நாடுகளின் பட்டியலில் அமெரிக்க முதலிடத்திற்கு தள்ளப்பட்டுள்ள,

அங்கு இது வரை 85,991 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியமை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது வரை சீனாவே முதலிடத்தில் இருந்து வந்தது. அங்கு இது வரை 81,782 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

அமெரிக்காவில் தற்போது வரை 1,296 பேர் மரணமடைந்துள்ள நிலையில், இது முறையே இத்தாலி 8,215 பேர், ஸ்பெயின் 4,365 பேர், சீனா 3,291 பேர், ஈரான் 2,234 பேர், பிரான்ஸ் 1,696 பேர் என மரண எண்ணிக்கையில் 6ஆவது இடத்தை நெருங்கியுள்ளது.

இன்றையதினம் (22) கொரோனா வைரஸின் தொற்றுக்குள்ளானவர்களின் உலகளாவிய எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்துள்ளது. தற்போது 532,788 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

இதில் 122, 672 பேர் குணமடைந்துள்ளனர்.

உலகளாவிய ரீதியில் மரண எண்ணிக்கை 24,077 ஆக பதிவாகியுள்ளது.

இதில் அதிக எண்ணிக்கையிலான மரண எண்ணிக்கையை இத்தாலி தொடர்ந்தும் பதிவு செய்துள்ளது. அங்கு இது வரை 8, 215 பேர் மரணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்று உலகளாவிய ரீதியில்
ஜனவரி 22 - 580 பேர்
மார்ச் 06 - 102,050 பேர்
மார்ச் 18 - 218,822 பேர்
மார்ச் 21 - 305, 036 பேர்
மார்ச் 24 - 422,574 பேர்
மார்ச் 27 - 532,788 பேர்

இத்தாலியில் - 4,825 பேர் மரணம்
- கடந்த 24 மணித்தியாலங்களில் 793 பேர் பலி
- 53,578 பேருக்கு தொற்று
- 6,072 பேர் குணமடைவு

சீனாவில் - 3,291 பேர் மரணம்
- 81,782 பேருக்கு தொற்று
- 74,181 பேர் குணமடைவு

ஈரானில் - 2,234 பேர் மரணம்
- 29,406 பேருக்கு தொற்று
- 10,457 பேர் குணமடைவு

ஸ்பெயினில் - 4,365 பேர் மரணம்
- 57,786 பேருக்கு தொற்று
- 7,015 பேர் குணமடைவு

அமெரிக்காவில் - 1,296 பேர் மரணம்
- 85,991 பேருக்கு தொற்று
- 753 பேர் குணமடைவு
(3/27/2020 1:39pm)

Fri, 03/27/2020 - 13:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை