ஈரானில் 85 ஆயிரம் கைதிகள் விடுதலை

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஈரானில் அரசியல் கைதிகள் உட்பட சுமார் 85,000 கைதிகள் விடுவிக்கப்படுவதாக அந்நாட்டு நீதித்துறை அறிவித்துள்ளது.

ஈரானில் 14,991 பேர் வைரஸ் தொற்றில் பாதிப்புற்றிருப்பதோடு உயிரிழப்பு எண்ணிக்கை 853 ஆக அதிகரித்துள்ளது. சீனாவுக்கு வெளியில் இத்தாலிக்கு அடுத்து இந்த வைரஸினால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக ஈரான் உள்ளது.

“இதுவரை சுமார் 85,000 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றை தடுப்பதற்கு சிறைகளில் நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறோம்” என்று நீதித்துறை பேச்சாளர் கொலாம் ஹொஸைன் இஸ்மைலி குறிப்பிட்டார்.

எனினும் விடுவிக்கப்பட்டவர்கள் மீண்டும் சிறைக்குத் திரும்புவது குறித்து அவர் எந்ந விபரத்தையும் வெளியிடவில்லை.

ஈரான் மார்ச் மாதம் அரம்பத்தில் 70,000 கைதிகளை விடுவித்தமை குறிப்பிடத்தக்கது.

Wed, 03/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை