கொரோனா தொற்றி சிகிச்சை பெறும் 76 பேரில் 48 பேர் வெளிநாட்டவர்

கொரோனா தொற்றி சிகிச்சை பெறும் 76 பேரில் 48 பேர் வெளிநாட்டவர்-COVID19-Situation-Report-48 Out of 76 are Foreigners

- 69 பேர் IDH; 04 பேர் அ'புரத்தில்; 3 பேர் வெலிகந்தவில் சிகிச்சை
- 22 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 3,063 பேர்
- சுமார் 10,000 பேர் சுய தனிமைப்படுத்தலில்

இலங்கையில், COVID-19 நோய்க்கு உள்ளானவர்களின்‌ எண்ணிக்கை 77ஆகும்‌.

குறித்த நபர்களுள்‌ 69 பேர்‌ IDH வைத்தியசாலையிலும்‌ 04 பேர்‌ அநுராதபுரம்‌ பொது வைத்தியசாலையிலும்‌ 03 பேர்‌ வெலிகந்த ஆதார வைத்தியசாலையிலும்‌ சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு உறுதிசெய்துள்ளது.

இவர்களுள்‌ 48 பேர்‌ வெளிநாட்டிலிருந்து இந்நாட்டிற்கு வந்தவர்கள்‌ என்பதோடு, 17பேர்‌ வெளிநாட்டிலிருந்து வருகை தந்த நபர்களுடன்‌ நெருக்கமான தொடர்பைகொண்ட நபர்கள்‌ ஆவர்‌. எஞ்சியோருக்கு நோய்‌ ஏற்பட்ட முறை குறித்த விடயங்கள்‌ ஆராயப்பட்டு வருகின்றன.

தற்பொழுது இலங்கையில்‌ 22 தனிமைப்படுத்தும்‌ மத்திய நிலையங்களில்‌ தனிமைப்படுத்தப்பட்டுள்ளோரின்‌ எண்ணிக்கை 3,063 என்பதோடு, இவர்களுள்‌ 31 பேர்‌ வெளிநாட்டவர்கள்‌ ஆவர்‌.

இது தவிர சுகாதார பிரிவு இராணுவம்‌, புலனாய்வு பிரிவு பொலிஸ்‌ மற்றும்‌ பொது மக்கள்‌ சுகாதார பரிசோதகர்களினால்‌ அடையாளங்‌ காணப்பட்ட, சுமார்‌ 10,000 பேர்  சுய தனிமைப்படுத்தல்‌ நடவடிக்கைகளை கடைப்பிடித்து செயல்படுவதற்கான ஆலோசனைகள்‌ வழங்கப்பட்டுள்ளன.

IDH இற்கு மேலதிகமாக மேலும் சில வைத்தியசாலைகள்
சுகாதார பணிப்பாளர்‌ நாயகம்‌ அனில்‌ ஜாசிங்க தெரிவித்தற்கு அமைய, இன்றைய தினம்‌ முதல் IDH வைத்தியசாலைக்கு மேலதிகமாக கிழக்கு கொழும்பு முல்லேரியா வைத்தியசாலை, இலங்கை இராணுவத்தின்‌ ஒத்துழைப்புடன்‌ விசேட வைத்தியர்களின்‌ சிபாரிசுக்கு அமைவாக கொவிட்‌ 19 நோய்‌த் தொற்று உள்ளானோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக தயார்படுத்தப்பட்டூள்ளது.

இதற்கு மேலதிகமாக வைத்தியர்‌ நெவில்‌ பெனாண்டோ வைத்தியசாலை கொவிட்‌ 19 நோய்தொற்று என்று சந்தேகிக்கப்படும்‌ கர்ப்பிணித்‌ தாய்மார்களுக்காகவும்,‌ டி சொய்சா வைத்தியசாலை மற்றும்‌ காசல்‌ வீதி பெண்கள் வைத்தியசாலை விசேட வைத்தியர்களின்‌ கண்காணிப்பின்‌ கீழ்‌ சிகிச்சை மேற்கொள்ளப்படூகின்றது.

மேலும்‌ ஹோமாகம ஆதார வைத்தியசாலை கொவிட்‌ -19  சந்தேகத்திற்குரிய நபர்களின்‌ சிகிச்சைக்காக தயார்படுத்தப்பட்டுள்ளதுடன்‌ , வொய்ஸ்‌ ஒப்‌ அமெரிக்கா கட்டடத்‌ தொகுதி இராணுவத்தின்‌ ஒத்துழைப்புடன்‌ நவீனமயப்படுத்தப்பட்டு கொவிட்‌ -19 வைரசு தொற்றுக்குள்ளானவருக்காக தயார்படுத்தப்பட்டு வருகின்றது.

இதே போன்று வேரஹரவில்‌ அமைந்துள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில்‌ 30 கட்டில்களுடன்‌ சிகிச்சைப்‌ பிரிவொன்று ஏற்பாடு செய்வதற்கும்‌ தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2020 மார்ச்‌ மாதம்‌ 20ஆம்‌ திகதி மாலை 10.30 இற்கு UL196 இலக்க‌ விமானத்தில்‌ இந்தியாவில்‌ புதுடில்லி நகரத்தில்‌ இருந்து வந்த 172 விமானப்‌ பயணிகள்‌ தனிமைப்படுத்தல்‌ நடவடிக்கைகளுக்காக இரணைமடு தனிமைப்படுத்தல்‌ மத்திய நிலையத்திற்கும்‌ 41 பேர்‌ முல்லைத்தீவு தனிமைப்படுத்தல்‌ மத்திய நிலையத்திற்கும்‌ தனிமைப்படுத்தல்‌ நடவடிக்கைக்காக உள்வாங்கப்பட்டுள்ளனர்‌.

அவசரகால சட்டம்‌ அமுலில்‌ உள்ள காலப்பகுதிக்குள்‌ அத்தியாவசிய விடயங்கள்‌ தவிர வீடுகளிலிருந்து வெளியேறாமல்‌ வீட்டுக்குள்‌ தங்கியிருந்து இந்த தொற்று நிலையை கட்டூப்படூத்துவதற்கு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களிடம்‌ கேட்டுக்‌ கொள்வதாக, கொவிட்19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

Sat, 03/21/2020 - 23:54


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக