ஊரடங்கை மீறி கைதானோர் எண்ணிக்கை சுமார் 7,000

கம்பஹா, கொழும்பு, களுத்துறை, புத்தளம், கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இன்று (30) காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையான 06 மணித்தியால காலப்பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 35 வாகனங்களும் இக்காலப்பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் கடந்த 20ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டு  வருகின்றது.

இதற்கமைய கடந்த  20ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் இன்று நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 6,925 பேர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, 1,678 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Mon, 03/30/2020 - 13:45


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை