52வது தேசிய கரம் சம்பியன்ஷிப் போட்டி

இலங்கை கரம் சம்மேளனம் ஏற்பாடு செய்த 52வது தேசிய கரம் சம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் இரட்டையர் சம்பியன்ஷிப் வெற்றிக் கிண்ணத்தை இலங்கை இராணுவத்தின் சசிகா சந்தமாலி மற்றும் ரெபேக்கா தல்ரின் ஆகியோர் வெற்றி கொண்டதுடன், கலப்பு இரட்டையருக்கான வெற்றிக் கிண்ணத்தை இலங்கை கடற்படையின் நிசாந்த பெர்னாண்டோ மற்றும் நுேககொடை மஹாமாயா மகளிர் கல்லூரியின் நிபுணி தில்ருக்சி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மேலும் மூத்தவர்களுக்கான வெற்றிக் கிண்ணத்தை கோட்டை வை.எம்.சி.ஏ அமைப்பின் ஈ.ஏ.டி.இந்திரஜித் வெற்றி கொண்டார்.

இந்த சுற்றுப் போட்டிகள் ஆண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர்இ பெண்கள் ஒற்றையர், பெண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் மற்றும் மூத்த உறுப்பினர் ஆகிய ஆறு பிரிவுகளின் கீழ் இடம்பெற்றது. தெல்கந்தையில் அமைந்துள்ள இலங்கை கரம் சம்மேளன தலைமையகத்தில் மார்ச் 07ம் திகதியிலிருந்து இடம்பெற்ற இந்தப் போட்டிகளில் நாடு முழுவதிலுமிருந்து சுமார் 400 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ஆண்கள் ஒற்றையர் மற்றும் பெண்கள் ஒற்றையர் பூர்வாங்க போட்டிகள் இம்மாதம் 14ம் திகதி ஆரம்பமாவதோடு, இறுதிப் போட்டிகள் இம்மாதம் 28ம் திகதி இடம்பெறவுள்ளது. கடந்த 7ம் திகதி மின்சாரத் தடங்களின் காரணத்தினால் திட்டமிடப்பட்டிருந்த ஆண்கள் இரட்டையர்களுக்கான போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளதோடு இப்போட்டிகள் இம்மாதம் 29ம் திகதி காலை 9.00 மணிக்கு அதே இடத்தில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை கடந்த 2019ம் ஆண்டில் இடம்பெற்ற 51வது தேசிய கரம் சம்பியன்ஷிப் போட்டிக்கான பரிசளிப்பு வைபவம் இம்மாதம் 22ம் திகதி மாலை 4.00 மணிக்கு இலங்கை கரம் சம்மேளன தலைமையகத்தில் இடம்பெறவுள்ளதோடு, அதில் வெற்றிபெற்ற வெற்றியாளர்கள் அன்றைய தினம் இலங்கை கரம் சம்மேளன தலைமையகத்திற்கு வருகை தருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

 

போட்டி முடிவுகள் -

பெண்கள் இரட்டையர்

சம்பியன் - இலங்கை இராணுவத்தின் சசிகா சந்தமாலி மற்றும் ரெபேக்கா தல்ரின்

(25/15, 16/25, 25/20)

இரண்டாமிடம்

இலங்கை கடற்படையின் ஜோசப் ரொசிட்டா மற்றும் நுகேகொடை மஹாமாயா மகளிர் கல்லூரியின் தருசி ஹிமாஹன்சிகா.

மூன்றாமிடம் - இலங்கை இராணுவத்தின் மதுவந்தி குணதாச மற்றும் எம். சித்ராதேவி

(25/15, 03/25, 25/10)

 

கலப்பு இரட்டையர்

சம்பியன் - இலங்கை கடற்படையின் நிசாந்த பெர்னாண்டோ மற்றும் நுகேகொடை மஹாமாயா மகளிர் கல்லூரியின் நிபுணி தில்றுக்சி. (25/0, 12/25, 25/11)

இரண்டாமிடம் - இலங்கை இராணுவத்தின் ஜோசப் திலான் மற்றும் தெத்துனி நொமாயா.

மூன்றாமிடம் - கொழும்பு றோயல் கல்லூரியின் சஹீட் ஹில்மி மற்றும் இலங்கை கடற்படையின் ஜோசப் ரொசிட்டா. (25/24, 25/0)

 

மூத்தவர்கள் தனியாள்

சம்பியன் - கோட்டை வை. எம். சி. ஏ யின் ஈ. ஏ. டீ. இந்திரஜித். (22/25, 25/18, 25/16)

ரன்னர்ஸ் அப் - கண்டி விளையாட்டுக் கழகத்தின் கே. ஜீ. எஸ். ஜே. பிரசாத்

மூன்றாமிடம் - எஸ்.எல்.டி.பியின் ஆர். ஏ. ஜீ. விக்ரமசிங்க. (22/25, 25/15, 25/08)

(புத்தளம் விசேட நிருபர்)

Sat, 03/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை