மன்னாரில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான உதைபந்தாட்டப் போட்டி

மன்னார் மாவட்டத்தில் சொக்கோர் மாஸ்ரர் விளையாட்டுக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு பத்து வருடங்கள் நிறைவுபெறும் இவ்வேளையில் மன்னார் மாவட்டத்தில் உதைபந்தாட்ட வளர்ச்சியில் தன்னை அர்ப்பணித்த அமரர் அன்ரன்

தங்கேஸ்வரன் மூன்றாவது ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டிகள் கடந்த சனி , ஞாயிறு (07,08) ஆகிய இரு தினங்கள் நடைபெற்றன.

நாற்பது வயதுகளுக்கு மேற்பட்டவர்களுக்கான இவ் உதைபந்தாட்டப் போட்டிகளில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து வவுனியா, கிளிநொச்சி, அம்பாறை,மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் மன்னார் அணிகளும் கலந்து கொண்டன. மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இவ் இறுதி விளையாட்டுப் போட்டிகளில் மன்னார் 'ஏ' சொக்கோர் மாஸ்ரர் விளையாட்டுக் கழகம் 2- _ 1 கோல்களால் வெற்றியீட்டியது.

இப் போட்டியில் சிறந்த வீரர்களாக மன்னார் சொக்கோர் மாஸ்ரர் 'ஏ'

விளையாட்டு கழகத்தின் டிக்கோனி, ஞானம் மற்றும் சிறந்த பந்து காப்பாளராக அனஸ்ரின் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இவ் போட்டியில் வெற்றியீட்டிய முதல் அணிக்கு 50,000 ஆயிரம் ரூபாவும் கேடயமும், இரண்டாவது அணிக்கு 30,000 ஆயிரம் ரூபாவும் கேடயமும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூபா 5000 மற்றும் வெற்றி கிண்ணமும் வழங்கப்பட்டன.

இவ் விழாவுக்கு பிரதம அதிதியாக வட மாகாண பிரதம உதவி செயலாளர் திருமதி ஸ்ரனி டீ மெல், சிறப்பு அதிதியாக மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய

கல்லூரி அதிபர் அருட்சகோதரர் றெஜினோல்ட் (டிலாசால் சபை), மன்னார் நகர சபை உறுப்பினர் மைக்கல் கொலீன், மன்னார் மாவட்ட விளையட்டு அதிகாரி பிறின்ஸ் டயஸ் மற்றும் தாழ்வுபாடு பாடசாலை அதிபர் ஸ்ரனி டீ மெல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

(தலைமன்னார் நிருபர் ) 

 

Tue, 03/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை