இத்தாலியில் 2,600க்கும் அதிக மருத்துவ ஊழியர்களுக்கு தொற்று

இத்தாலியில் 2,600க்கும் அதிகமான மருத்துவ ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது அந்நாட்டில் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களில் 8.3 வீதமாகும்.

சுகாதார ஸ்தாபனம் ஒன்றினால் வெளியிடப்பட்டிருக்கும் இந்தத் தகவலின்படி, மருத்துவர்களுக்கான பாதுகாப்பு போதுமானதாக இல்லை என்பது உறுதியாவதாக அது குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பிரச்சினை சீனாவை விடவும் மோசமாக உள்ளது. 8.3 வீதம் என்பது சீனாவை விடவும் இரட்டிப்பான மருத்துவ ஊழியர்கள் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதாக கிம்பே ஸ்தாபனத்தின் தலைவர் நினோ கார்டபெலோட்டா இத்தாலி ஊடகத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

உத்தியோகபூர்வ தரவுகள் அடிப்படையில் பெறப்பட்டிருக்கும் இந்த எண்ணிக்கையில் கடந்த எட்டு நாட்களுக்குள் நோய்ப் பாதிப்புக்கு உள்ளான மருத்துவர்கள் எண்ணிக்கை 1,500 இனால் அதிகரித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

சீனாவுக்கு அடுத்து கொரோனா வைரஸ் தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் இத்தாலியில் மருத்துவர் பற்றாக்குறையினால் மருத்துவ கல்லுௗரிகளின் இறுதி ஆண்டு மாணவர்களும் பணியமர்த்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Fri, 03/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை