மெட்ரோபொலிடன் பிரதான அனுசரணை; 2 ஆவது ஸஹிரியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஏப்ரலில்

மாளிகைகாடு குறூப்,சாய்ந்தமருது தினகரன்,சவளக்கடை குறூப் நிருபர்கள்

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பான ஸஹிரியன் பழைய நண்பர்கள் ஒன்றியம் ( ZOFA) ஒழுங்கு செய்திருந்த 2 ஆவது ஸஹிரியன் பிரிமியர் லீக் ( ZPL ) பருவகால கிரிக்கெட் சுற்றுப் போட்டி சம்பந்தமாக ஊடகவியலாளர்களுக்கும் பங்கேற்கும் பழைய மாணவர் குழுக்களுக்கும் விளக்கமளிக்கும் பத்திரிகையாளர் மாநாடும் சம்பியன் கிண்ணத்தினை உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வும் , ரீ சேர்ட் அறிமுக நிகழ்வும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) கல்முனை கல்லூரியின் கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் கல்லூரி முதல்வர் எம்.ஐ.ஜாபிர் தலைமையில் இடம்பெற்றது

சோபா (SOFA) அமைப்பின் பணிப்பாளர்களான முஹம்மட் பிரிம்ஸாத், அலி ரஜாய், ஏ.எச்.இஸட். இம்தியாஸ், றமீஸ் மௌலானா, மௌஸுன் மீராசாஹிப், அஸ்லம் ஸிஹான் ஆகியோரின் முன்னிலையில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு பிரதான அனுசரணையாளரான கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் , மெட்ரோபொலிடன் கல்லூரியின் தவிசாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

ஸாஹிரா தேசியக்கல்லூரியின் 29 பழைய மாணவர்கள் குழுக்கள் மேற்படி சுற்றுப் போட்டியில் பங்கேற்கவுள்ளன. இப் போட்டித் தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 09 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதிவரை ஸாஹிரா தேசியக்கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. நொக்கவுட் முறையில் அணிக்கு 11 பேர் கொண்ட 8 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்டதாக இச்சுற்றுப் போட்டி அமையவுள்ளது. மஞ்சள் குழுவில் ஸஹிரியன் 90 அணி, உஸ்பா 91 அணி, ஸஹிரியன் 92 அணி, நொட் அவுட் 92 அணி, ஸஹிரியன் 93 அணி,

பவர்பிளேயர்ஸ் 96 அணி , சுப்பர் ஹீரோஸ் 97 அணி, ஸஹிரியன் 98 அணி ஆகியனவும், பச்சை குழுவில் ஸெஸ்டோ 99 அணி, ஸஹிரியன் வை 2 கே அணி, கிளசிக்கல் சீரோ வன் அணி, யுனைடெட் ஸஹிரியன் 2 ஓ அணி, வூம் வூம் ஸஹிரியன் அணி, அலியார் ரெஜிமென்ட் அணி, பெச் ஓ 5 அணி ஆகியனவும், சிவப்பு குழுவில் ஸஹிரியன் லயன்ஸ் அணி, சுப்பர் வொரியஸ் அணி, கஜபா 08 அணி, கிறிக் 90 அணி, 91 மெட்ஸ் குறுப் அணி, ரீம் 92 அணி, மெக்ஸ் சாஜர்ஸ் அணி ஆகியனவும், நீல குழுவில் கிளாஸ் ஒப் தேர்டீன் அணி, லெஜன்ஸ் ஒப் ஸாஹிரியன் அணி, ஸஹிரியன் விக்கின்ஸ் அணி, 16 ஸஹிரியன்ஸ் அணி, ஸஹிரியன் வொல்வ்ஸ் அணி, ரீம் 99 அணி, ரீம் 2 கே அணி ஆகியன பங்கேற்கவுள்ளன. இச்சுற்றுப் போட்டியில் சம்பியனகளாக தெரிவு செய்யப்படும் அணிக்கு 25,000 ரூபா பணப்பரிசும் சம்பியன் கிண்ணமும், இரண்டாம் இடம் பெறும் அணிக்கு 15,000 ரூபா பணப்பரிசும் வழங்கப்படவுள்ளது. இச்சுற்றுப்போட்டிக்கு மெட்ரோபொலிடன் கல்லூரி பூரண அனுசரணையினையும், CIMA நிறுவனம் இணை அனுசரணையினையும் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thu, 03/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை