விசேட தேவையுடையோர் 19 பேரை கொன்றவருக்கு மரண தண்டனை

பராமரிப்பு இல்லம் ஒன்றில் 2016 ஆம் ஆண்டு விசேட தேவையுடையோர் 19 பேரை குத்திக் கொன்ற ஜப்பான் நாட்டவர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

விசேட தேவையுடையவர்களுக்கு தொடர்பாட முடியவில்லை என்றும் அவர்களிடம் மனித உரிமை பார்க்க முடியாது என்றும் சதோசி யிமட்சு தனது கொலைகளுக்கு நியாயம் கூறியிருந்தார்.

30 வயதான அந்த ஆடவர் முன்னர் டோக்கியோவுக்கு அருகில் இருக்கும் பராமரிப்பு இல்லம் ஒன்றில் பணியாற்றியுள்ளார்.

ஜப்பானில் இடம்பெற்ற மிக மோசமான படுகொலைச் சம்பவமாக இது உள்ளது.

இந்நிலையில் அவரை தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றும்படி யொகஹாமா மாவட்ட நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது.

எனினும் தமக்கு இதற்கு எதிராக மேன்முறையீடு செய்ய திட்டமில்லை என்று யிமட்சு குறிப்பிட்டிருந்தார்.

டோக்கியோவுக்கு வெளியில் இருக்கும் பராமரிப்பு இல்லத்தின் ஜன்னல் கதவை உடைத்து உள்ளே புகுந்திருக்கும் யிமட்சு அங்கு உறங்கிக் கொண்டிருந்தவர்களை ஒருவர் பின் ஒருவராக தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதில் 19 தொடக்கம் 70 வயதுடையவர்கள் கொல்லப்பட்டனர்.

Tue, 03/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை