188 பேர் வீடு திரும்பினர்; இன்று 443 பேர் வீடு திரும்புவர்

188 பேர் வீடு திரும்பினர்; இன்று 443 பேர் வீடு திரும்புவர்-4th Batch Returned Home-Completing Quarantine Period

இலங்கை இராணுவத்தால் முன்னெடுத்துச் செல்லப்படும், தனிமைப்படுத்தல் முகாம்களிலிருந்து இன்று 188 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

இன்றையதினம் (27) 443 பேர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக, கொவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியான, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இது வரை 678 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களை விட்டு வெளியேறியுள்ளதாக, இராணுவத் தளபதி தெரிவித்தார்.

இன்றையதினம் (27) நான்காம் கட்டமாக தனிமைப்படுத்தலை நிறைவு செய்த, 188 பேர் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து 25 பேரும், புனானையில் மேலும் 163 பேரும் இவ்வாறு வீடு திரும்பியுள்ளனர்.

நேற்றையதினம் (26) புனானை 125 பேர், கந்தக்காடு 42 பேர், தியத்தலாவை 38 பேர்
என நான்கு தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் மொத்தமாக 223 பேர் தங்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

இதேவேளை, 46 தனிமைப்படுத்தல் நிலையங்களில் மேலும் 2,866 பேர் தொடர்ந்தும்  தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, இராணுத் தளபதி ஷவேந்திர் சில்வா தெரிவித்துள்ளார்.

Fri, 03/27/2020 - 11:01


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை