நைஜீரிய குடியிருப்பு பகுதியில் எரிவாயு வெடிப்பு: 17 பேர் பலி

நைஜீரியாவின் மிகப் பெரிய நகரான லாகோஸில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற எரிவாயு வெடிப்பு ஒன்றில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

குடியிருப்புப் பகுதியின் எண்ணெய்க் குழாய் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற இந்த வெடிப்பில் கட்டடங்கள் இடிந்து, லொரிகள் மற்றும் கார்கள் தீக்கிரையாகியுள்ளன.

“சம்பவம் இடம்பெற்ற பகுதியில் இடிபாடுகளில் இருந்து 17 சடலங்கள் மீட்கப்பட்டதோடு 25 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்” என்று லாகோஸ் மாநில அரசு ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் சுமார் 50 கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.

எரிவாயு தொழிற்சாலை ஒன்றில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த எரிவாயு போத்தல்கள் மீது டிரக் வண்டி மோதியதாலேயே இந்த வெடிப்பு நேர்ந்ததாக நைஜீரிய தேசிய பெட்ரோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

எரிவாயு வெடிப்பின் சத்தம் கிட்டத்தட்ட மூன்று கிலோமீற்றருக்கு அப்பால் கேட்டது என்று சம்பவம் குறித்து சிலர் குறிப்பிட்டனர். கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்கின்றன.

Tue, 03/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை