மேலும் மூவர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் எண்ணிக்கை 120

மேலும் மூவர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் எண்ணிக்கை 120-COVID19 Patients Identified in Sri Lanka Increased Up to 120

117 பேர் கண்காணிப்பில்; 11 பேர் குணமடைவு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய இன்று (30) காலை 8.00 மணியளவில் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு வெளியிட்டுள்ள கணக்கின்படி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கனின் எண்ணிக்கை 117 இலிருந்து 120 ஆக அதிகரித்துள்ளது.

அதற்கமைய, இன்றையதினம் (29) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இருவர் இது வரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் (29) மொத்தமாக 02 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமை அடையாளம் காணப்பட்டிருந்தது.

கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்ட 120 பேரில் தற்போது 108 நோயாளிகள் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 11 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். ஒருவர் மரணமடைந்துள்ளார்.

அத்துடன் மருத்துவக் கண்காணிப்பில் தற்போது 117 பேர் வைக்கப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.

அடையாளம் - 120
குணமடைவு - 11

கண்காணிப்பில் - 117
சிகிச்சையில் - 108

மரணம் - 01

மரணமடைந்தவர்கள் (04)
இலங்கையில்
மார்ச் 28 - ஒருவர் (01)
வெளிநாட்டில்
லண்டனில் - 02 பேர் (03)
சுவிஸ்லாந்தில் - ஒருவர் (01)

குணமடைந்தவர்கள்
மார்ச் 29 - 02 பேர் (11)
மார்ச் 28 - 02 பேர் (09)
மார்ச் 27 - ஒருவர் (07)
மார்ச் 26 - 03 பேர் (06)
மார்ச் 25 - ஒருவர் (03)
மார்ச் 23 - ஒருவர் (02)
பெப் 19 - 01 (சீனப் பெண்)

கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை
மார்ச் 30 - 03 பேர் (120)
மார்ச் 29 - 02 பேர் (117)
மார்ச் 28 - 09 பேர் (115)
மார்ச் 27 - 00 பேர் (106)
மார்ச் 26 - 04 பேர் (106)
மார்ச் 25 - 00 பேர் (102)
மார்ச் 24 - 05 பேர் (102)
மார்ச் 23 - 10 பேர் (97)
மார்ச் 22 - 09 பேர் (87)
மார்ச் 21 - 05 பேர் (78)
மார்ச் 20 - 13 பேர் (73)
மார்ச் 19 - 07 பேர் (60)
மார்ச் 18 - 11 பேர் (53)
மார்ச் 17 - 13 பேர் (42)
மார்ச் 16 - 10 பேர் (29)
மார்ச் 15 - 08 பேர் (19)
மார்ச் 14 - 05 பேர் (11)
மார்ச் 13 - 03 பேர் (06)
மார்ச் 12 - ஒருவர் (03)
மார்ச் 11 - ஒருவர் (02)
ஜனவரி 01 - ஒருவர் (சீனப் பெண்) (01)

இலங்கையில் கொரோனா நோயாளிகள் பதிவான இடங்கள்

Mon, 03/30/2020 - 09:51


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை