10,000 மருத்துவ மாணவர்களை பணியில் அமர்த்தும் இத்தாலி

இத்தாலியில் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் நிலையில் 10,000 மருத்துவக் கல்லூரி மாணவர்களை இறுதி ஆண்டுப் பரீட்சைக்கு முன்னரே உடன் பணியில் அமர்த்துவதற்கு அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.

பரீட்சையில் இருந்து விலக்கப்படும் மருத்துவ மாணவர்கள், மருந்தகங்களிலும் முதியோர் இல்லங்களில் பணியமர்த்தப்படுவர். அதன் மூலம், ஏற்கனவே அங்கு சேவையாற்றி வரும் அனுபவமிக்க இதர மருத்துவர்கள் தேவை அதிகம் உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றிவிடப்படுவர்.

கொரோனா வைரஸ் பரவலைச் சமாளிக்க இத்தாலிய சுகாதாரத் துறை பெரிய அளவில் தவித்து வருகிறது.

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை முன்னிட்டு மருத்துவமனைகளுக்கான பற்றாக்குறை நிலவுகிறது.

அதன் காரணமாக வெளிப்புற வசதிகளை இத்தாலிய அரசாங்கம் கட்டவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த வைரஸ் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் நாட்டின் வடக்குப் பிராந்தியத்தில் கடந்த மூன்று வாரங்களில் 1,135 பேருக்கு அவசர சிகிச்சை வழங்க வேண்டி இருக்கும் நிலையில் அங்கு 800 அவசர சிகிச்சை படுக்கைகளே இருப்பதாக மிலானின் பொலிக்லினிகோ மருத்துவமனையின் அவசரப் பராமரிப்பு பிரிவின் தலைவர் கியாகோமோ கிரசெலி குறிப்பிட்டுள்ளார்.

Thu, 03/19/2020 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக