சகலரும் ஐக்கியமாக வாழும் முன்னோர்களின் இலட்சியங்களை கௌரவப்படுத்துவோம்

நாட்டின் 72 ஆவது சுதந்திர தினத்தை  நினைவு கூரும் இச்சந்தர்ப்பத்தில் எமது முன்னோர்களின் தியாகங்கள்  மனக்கண்கள்முன்னே கொண்டு வரப்படுகின்றது.

சுதந்திரத்தை பெறுவதற்காக பல்லினத்தையும் சேர்ந்த நம் மூதாதையர்கள் உழைத்தனர்.

இன, மத வேறுபாடின்றி சுதந்திரத்தை பெற்றுக்கொள்வதும், அதன் அடிப்படையில் ஐக்கியமாக வாழ்வதுமே அவர்களது குறிக்கோள்களாக இருந்தன. இதனாலேயே தமக்குரிய உரிமைகளைப் பெற்று, நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டனர். 

 சகலஅரசாங்கங்களிலும் பங்காளிகளாக இருந்து நாட்டின் கல்வி, பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும்  அபிவிருத்திகளில் எமது முன்னைய தலைவர்கள்  பங்கேற்றிருந்தமையே உண்மையான வரலாறாகும். 

சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ சமூகங்களை சேர்ந்த தலைவர்கள் பெற்றுத் தந்த இச்சுதந்திர பூமியில் வன் செயல்கள், மத நிந்தனைகள் இடம்பெறுவதை எவரும் அனுமதிக்க முடியாது. இந்த வகையில் புதிய ஜனாதிபதியின் கீழ், ஐக்கியம்  வலுப்பெற வேண்டுமெனப் பிரார்த்திக்கிறோம். 

அக்கிராஷன உரையில் ஜனாதிபதி கூறியது போன்று, அவர் இந்நாட்டு சகல பிரஜைகளினதும் சபீட்சத்துக்காக ஜனாதிபதி செயற்பட வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு.

சகல சமூகங்களும் ஒற்றுமையாக இருந்து நாட்டில் நல்லபிவிருத்தி ஏற்பட பாடுபடுவோம்.

சகல வளத்துடனும் நாடு நிம்மதிபெற,அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்திக்கிறது. 

Tue, 02/04/2020 - 09:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை