டின்சின் தோட்டபகுதியில் தீ மூன்று ஏக்கர் காடு அழிப்பு

பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ டின்சின் தோட்ட பகுதியில் உள்ள மானா தோப்பிற்கு இனந்தெரியாதோரால் வைக்கப்பட்ட தீயினால் மூன்று ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்

இந்த சம்பவம் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த பகுதிக்கு வைக்கப்பட்ட தீயினால் தேயிலை மரங்கள், கருப்பன் தேயிலை மரங்கள் மானா புல் போன்றன எரிந்து நாசமாகியுள்ளது.மாட்டுக்கு புல் அறுக்க வந்தவர்களே தீயை வைத்திருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காணப்படுகின்றமையால் தீ வைப்பு சம்பவங்கள் அதிகரித்த நிலையில் மலையகத்தில் குடி நீருக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தீயை காட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டதோடு இதுவரை எவரும் கைது செய்யபடவில்லையென தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்

Thu, 02/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை