மயூராபதி ஆலய முன்றலில் சுதந்திர தின விசேட நிகழ்வு

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, புத்தசாசனம், கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் ‘இந்து சமய ஆராதனைகள்’ நேற்று (04) காலை 6.30 மணிக்கு வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நடைபெற்றது.

விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து ஆலய முன்றலில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு சமய மற்றும் நீதி நூல்கள் வழங்கப்பட்டன.

கடற்றொழில், நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம அதியாகவும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் உமா மகேஸ்வரனும் இந் நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்தனர்.

Wed, 02/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை