தெற்காசிய கூட்டுறவு அமைப்பு; உயர்மட்ட செயற்பாடுகள் அவசியம்

தெற்காசிய பிராந்திய கூட்டுறவு அமைப்பு உயர்ந்த மட்டத்தில் முழுமையாக செயற்படுவதன் மூலமே பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு துறைகளில் வெற்றிகரமான பிராந்திய ஒருங்கமைப்பு ஏற்படுமென முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். இந்து பத்திரிகை ஏற்பாடு செய்த நிகழ்வில் நேற்று முன்தினம் (23) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பெங்களூரில் நடந்த இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர்:

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான பதற்ற நிலை அதிகரித்த நிலையில் காத்மண்டுவில் நடைபெறவிருந்த 2017 சார்க் உச்சி மாநாடு பின்போடப்பட்டது. எனினும் சார்க் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் மூலோபாய ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் ஒருங்கிணைய வேண்டிய தேவை இப்போது வந்துள்ளது

அண்டை நாடுகள் தமக்கிடையிலான எல்லை கடந்த பயங்கரவாதம் உள்ளிட்ட வேறுபாடுகளை களைய வேண்டும். இல்லாவிடின் வெளியில் உள்ளவர்கள் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளுங்கள் என்று எம்மிடம் கூறவேண்டிய நிலை ஏற்படலாம்.

சார்க்கின் செயற்பாடுகள் முடங்கிய நிலையில் உள்ளது. எனினும் பிம்ஸ்டெக்அமைப்பு ஸ்திரமாக உள்ளதாகவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

Tue, 02/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை