புதிய கொரோனா வைரஸ் இம்மாதம் உச்சம் பெறலாம்

கொரோனா வைரஸ் தொற்று நோய் பெப்ரவரி மாதத்தில் உச்சத்தை எட்டலாம் என்றும் அதன் பின்னர் தளர்ந்து குறைந்துவிடும் என்றும் சீன அரசின் உயர் மரத்துவ ஆலோசகர் குறிப்பிட்டுள்ளார்.

2003 ஆம் ஆண்டு சார்ஸ் நோயை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்து சர்வதேச புகழை வென்ற முன்னணி தொற்றுநோயியல் நிபுணரான சொங் நஹ்சான் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார். சில மாகாணங்களில் நிலை முன்னெற்றம் அடைந்திருப்பதாகவும் புதிய நோய் தொற்று சம்பவங்கள் குறைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“எனவே, பெப்ரவரி, இம்மாதத்தின் பிற்பகுதி அல்லது நடுப்பகுதியில் உச்சத்தை எட்டலாம் என்று நாம் கருதுகிறோம். இதனைத் தொடர்ந்து சற்று உச்சம் அல்லது அதனைப் போன்ற நிலையில் நீடித்த பின்னர் வீழ்ச்சி காணும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வைரஸின் மையமாக உள்ள வூஹான் நகரில் கட்டுப்பாடுகள் அவசியம் என்றும் காட்டு விலங்குகளின் வர்த்தகத்தை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Wed, 02/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை