மௌவா இல்லம் சம்பியன்

மருதமுனை அக்பர் விளையாட்டுக் கழகத்தின் இல்ல விளையாட்டுப் போட்டியில் மௌவா இல்லம் சம்பியன் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது.

பாடசாலை அதிபர் ஏ.ஜிப்ரி தலைமையில் நடைபெற்ற இறுதிநாள் நிகழ்விற்கும் பரிசளிப்பு விழாவிற்கும் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல்,மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

மௌவா-, குலூத்- முக்காமா ஆகிய இல்லங்களுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் 152 புள்ளிகளைப் பெற்று மௌவா இல்லம் சம்பியனானது.

இல்லங்களுக்கான வடிவமைப்பில் பொதுஜன பொரமுனவின் மொட்டு சின்னத்தில் அமைந்த தாமரைக் கோபுரத்தை வடிவமைத்த மௌவா இல்லமே தெரிவானது.

அதிபர் ஏ.ஜிப்ரி தலைமையில் மருதமுனை மசூர்மௌலானா விளையாட்டு மைதானத்தில் போட்டிகள் இடம்பெற்றன.

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல்-மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

மௌவா-, குலூத்- முக்காமா ஆகிய இல்லங்களுக்கிடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் மௌவா இல்லம் இந்த ஆண்டின் சம்பியனாகத் தெரிவானது.

(பெரியநீலாவணை தினகரன் நிருபர்)

Thu, 02/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை