புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் மண்முனை தென் மேற்கு கோட்டத்திலுள்ள ஆறு பாடசாலைகளிலிருந்து கடந்த வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (09) அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இதன்போது அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயம், அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயம், முனைக்காடு விவேகானந்தா வித்தியாலயம், முதலைக்குடா கனிஷ்ட வித்தியாலயம், மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயம் மற்றும் கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிருந்து தெரிவான 41 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது இங்கு வருகைதந்த 41 மாணவர்களுக்கு மட்டக்களப்பு பிராந்திய செலிங்கோ நிறுவனத்தின் முகாமையாளர் எஸ். வேணுகரன் மற்றும் அதிபர், ஆசிரியர்களால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது. செலிங்கோ காப்புறுதி நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி அமைப்பின் உறுப்பினர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

(பெரியபோரதீவு தினகரன் நிருபர்)

Wed, 02/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை