புதிய ஜனாதிபதியின் கரங்களை சகல சமூகத்தினரும் பலப்படுத்த வேண்டும்

அமைச்சர் மஹிந்தஅமரவீர

நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்பக் கூடிய தலைமைத்துவம் கிடைத்துள்ளதையிட்டு நாமனைவரும் மகிழ்ச்சியடைய வேண்டுமென, மின்சாரம் எரிசக்தி மற்றும் பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்தஅமரவீர தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை மாநகர சபை எல்லைக்குட்பட்ட குர்ஆன் மத்ரஸாக்கள் மற்றும் அஹதியா பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடைத் துணிகள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஹம்பாந்தோட்டை தர்ம கபீர் ஜூம் ஆபள்ளிவாசலில் (02) நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர்:

நாட்டுக்கு தற்போது கிடைத்துள்ள தலைமைத்துவத்தை எதிர்வரும் பொதுத்தேர்தலில் பலப்படுத்த சிறுபான்மைச் சமூகங்களும் ஒத்துழைக்க வேண்டும்.அப்போதுதான் சௌபாக்கியமா தேசத்தை கட்டியெழுப்பலாம்.

மக்கள் பணத்தை வீண்விரயம் செய்யாத மக்கள் நலனில் மாத்திரம் அக்கறையுள்ள நபர்களையே எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறானவர்களையே, ஜனாதிபதியும் எதிர்பார்க்கிறார்.

பெரும்பான்மை வாக்குகளால் வெற்றியீட்டிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் கரங்களில் பாராளுமன்றப் பலத்தையும் ஒப்படைப்பதே எமக்குள்ள பணி.இதற்காக இன்று சகல சமூகங்களைச் சேர்ந்த மக்களும் தயாராகி வருகின்றனர்.ஐக்கியதேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் வானமும் பூமியும் போன்றன. இக்கட்சிகளால் என்றுமே ஒன்று சேரமுடியாது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எம்மில் சிலர் ராஜபக்ஷக்களைத் தோற்கடிப்பதற்காக சஜித்தை ஆதரித்தனர். இச்செயற்பாடுகளை நாம் முற்றாக எதிர்த்தோம். எனினும் 2015 ஜனாதிபதித் தேர்தலில் கட்சி எடுத்த தீர்மானத்திற்கமையவே அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினோம். மத்திய வங்கிபிணை முறி, ஊழல் மோசடி தொடர்பாக முதல் தடவையாக இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவில்,தானே முறைப்பாடு செய்ததாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டைகுறூப் நிருபர் 

 

Mon, 02/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை