மனித உரிமை தீர்மானத்திலிருந்து அரசாங்கம் விலகுவது நல்லதல்ல

-தீர்மானத்தை நிறைவேற்ற 2021 வரை இலங்கைக்கு கால அவகாசம்

ஐ.நா தீர்மானத்தின் இணை அனுசரணையில் இருந்து அரசாங்கம் விலகுவது நல்லதல்ல எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், அவ்வாறு அரசாங்கம் விலகினாலும் அந்தத் தீர்மானத்தில் பாதிப்புக்கள் ஏற்படாது என்றும் அத் தீர்மானம் தகுதியிழக்காது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடக சந்திப்பொன்றை யாழிலுள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடாத்தியது. இதன் போது கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் மற்றும் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

இச் சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் செயலாளர் துரைராஜசிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த ஊடக சந்திப்பில் ஐ.நா விவகாரங்கள் தொடர்பிலேயே சம்பந்தனும் சுமந்திரனும் கருத்துவெளியிட்டிருந்தனர். ஏனைய விடயங்கள் குறித்தான கேள்விகளுக்கு பதிலளிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதன் போது ஐ.நா விவகாரங்கள் தொடர்பில் கருத்துவெளியிட்டஅவர்கள், அதுதொடர்பாக கேள்விகளுக்குமாத்திரம் பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சந்திப்பில் இரா. சம்பந்தன் தெரிவித்ததாவது,

2009 ஆம் ஆண்டுநடைபெற்ற யுத்தம் முடிவிற்கு வந்தது. சிலநாட்களில் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான்கீமூன் இலங்கைக்கு வந்திருந்தார். ஏனெனில் யுத்தம் சம்பந்தமாக களநிலைமைகளை அறிவிப்பதற்காகவும் சிலநடவடிக்கைகளை எடுப்பதற்காகவும் அவர் இலங்கைக்கு வந்திருந்தார்.

ஜனாதிபதி மகிந்தராஜபக்சவைச் சந்தித்தபொழுது அவர்களுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக பொறுப்புக் கூறல் சம்பந்தமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் செயலாளர் நாயகம் பான்கீமூனுக்கு வழங்கப்பட்டது. அவருடைய பத்திரிகை வெளியீட்டில் அந்தக் கருமம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து இவ்விடயம் சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளில் தாமதம் ஏற்பட்டது. பான்கீமூன் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் என்ற அடிப்படையில் இந்தவிடயம் சம்பந்தமாக விசாரணை நடாத்தி தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர் குழுவொன்றை நியமித்தார்.

அதாவதுபொறுப்புக் கூறல் விடயத்தை முன்னெடுப்பதற்காக அந்தக் குழு அமைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்தவிடயம் சம்மந்தமாக விசாரணை நடாத்துவதற்கு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் ஒருகுழுவை நியமித்தார். செயலாளர் நாயகம் நியமித்த குழு தங்களுடைய அறிக்கையை சமர்ப்பித்தது.

அமெரிக்க இராஜாங்க அமைச்சருடன் தொடர்பு கொண்டு இந்தக் கருமங்கள் சம்பந்தமாக முறையான விசாரணையொன்று நடைபெறவேண்டுமென நாங்கள் கேட்டுக் கொண்டோம். அமெரிக்காவினால் 2012 ஆம் ஆண்டு ஜக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையில் ஒருபிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

அந்தப் பிரேரணை சம்பந்தமாக ஜக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டங்களில் விவாதங்கள் நடைபெற்றன. இறுதியில் 2015 ஆம் ஆண்டு ஒருதீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுதான் 30/1 என்றதீர்மானம் 2015 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்ததீர்மானம் நிறைவேற்றப்பட்டபொழுதுஅதில் பொறுப்புக் கூறல் சம்பந்தமாக மற்றும் கையாளவேண்டிய கருமங்கள் சம்பந்தமாக அந்தத் தீர்மானத்தில் விரிவாகக் கூறப்பட்டிருந்தது. இலங்கைஅரசாங்கத்திற்கு இரண்டுவருடகால அவகாசமும் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த இரண்டுவருடகால அவகாசம் முடிவடைந்த பிறகு இலங்கை அரசாங்கம் 2017 ஆம் ஆண்டுமீண்டும் காலஅவகாசம் கேட்டது.

இதற்கமைய 2019 வரையில் அந்தக் காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அந்தக் காலத்திற்குள்ளும் இந்தக் கருமத்தைநிறைவிற்கு கொண்டுவராமல் 2019 ஆம் ஆண்டும் மீண்டும் காலஅவகாசம் கேட்டு இன்றும் இரண்டுவருடங்களுக்கு நீடிக்கப்பட்டிருக்கின்றது.

அந்தப் பிரேரணைநிறைவேற்றுவது சம்மந்தமான கடமைகளைக் கையாளுவதற்குஅவர்களுக்கு தற்போது 2021 ஆம் ஆண்டு பங்குனிமாதம் வரையில் காலஅவகாசம் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்றார்.

பருத்தித்துறை விசேட நிருபர்

Mon, 02/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை