ஸ்பார்ட்டன் பிறிமியர் லீக் வோரியர் அணி சம்பியன்

அக்கறைப்பற்று ஸ்பார்ட்டன் கடின பந்து கிரிக்கெட் கழகத்தின் 2020ம் ஆண்டுக்கான பிறிமியர் லீக் சம்பியனாக ஸ்பார்ட்டன் வோரியர் அணி தெரிவானது.

ஸ்பார்ட்டன் கடின பந்து கிரிக்கெட் கழகத்தின் 2020ம் ஆண்டுக்கான பிறிமியர் லீக் போட்டிகள் அக்கறைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் இறுதிப்போட்டிக்கு ஸ்பார்ட்டன் வோரியர் அணியும், ஸ்பார்ட்டன் ஹரிகன்ஸ் அணியும் தெரிவானது.

இதில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்பார்ட்டன் ஹரிகன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஹரிகன்ஸ் அணி 17 ஓவர்கள் முடிவில் 4 விக்கட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.இதில் உபைத் 29 ஓட்டங்களையும், ஜெலீஸ் 15 ஓட்டங்களையும் கூடுதலாகப் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் ஸ்பார்ட்டன் வோரியர் சார்பாக முபாரஸ் 2 விக்கட்டுக்களையும், சஹான் ஒரு விக்கட்டினையும் வீழ்த்தினர். வெற்றி பெறுவதற்கு 138 ஓட்டங்களைப் பெற பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஸ்பார்ட்டன் வோரியர் அணி 16.3 பந்துவீச்சு ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டினர்.

ஸ்பார்ட்டன் வோரியர் சார்பாக ரிஹாம் 65 ஓட்டங்களையும்,முபாரிஸ் 30 ஓட்டங்களையும் கூடுதலாகப் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் உபைத் 2 விக்கட்டுக்களைக் கைப்பற்றினார். 3 பந்துகள் மீதமிருக்க ஸ்பார்ட்டன் வோரியர் அணி 4 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்று 2020ம் ஆண்டுக்கான பிறிமியர் லீக் சம்பியனாக தெரிவாகியது.

இறுதிப் போட்டி நிகழ்விற்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பிரபல தொழிலதிபர் ஏ.எஸ்.ஏ.பாஸித் சம்பியன் அணியான ஸ்பார்ட்டன் வோரியர் அணிக்கான கிண்ணத்தை வழங்கி வைத்ததடன் ரன்னர்அப் ஆக தெரிவான ஸ்பார்ட்டன் ஹரிகன்ஸ் அணிக்கான கிண்ணத்தை அக்கறைப்பற்று மாநகர சபை உறுப்பினர் அஸ்மி அப்துல் கபூர் வழங்கி வைத்தார்.

இறுதிப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஸ்பார்ட்டன் வோரியர் அணியின் ரிஹாம் தெரிவானதுடன் தொடரின் சிறந்த வீரராக ஸ்பார்ட்டன் வோரியர் அணியின் முபாரிஸ் தெரிவானார். தொடரின் சிறந்த வீரருக்கான கிண்ணத்தை பெப்ல்ஸ் அகடமியின் நிறைவேற்றுப்பணிப்பாளர் எம்.இன்ஸாப் வழங்கி வைத்தார்.

(அட்டாளைச்சேனை விசேட நிருபர்)

Fri, 02/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை