வெப்பநிலை அதிகரிப்பு; உபாதைகளை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை

சுற்றாடலில் அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக உடலில் ஏற்படக்கூடிய உபாதைகளை தவிர்த்துக்கொள்ளும் வகையில் விழிப்புணர்வுடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. இக் காலப்பகுதியில் குழந்தைகள், நான்கு வயதுக்குற்பட்ட சிறுவர்கள், 65வயதுக்கு மேற்பட்டவர்கள், உடற்பருமன் கூடியவர்கள்,நோயாளர்கள் ஆகியோர் தொடர்பில் அதிகூடிய கவனம் தேவையென்றும் சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

சுகாதார அமைச்சு இது தொடர்பில் விடுத்துள்ள அறிவுறுத்தல்களில் கூறப்பட்டுள்ளதாவது,

உஷ்ண நிலையை குறைப்பதற்காக அதிக தண்ணீரைப் பருக வேண்டும். அனைத்து வயதைச் சேர்ந்தவர்களும் தமது உடலால் தாங்கிக்கொள்ளக்கூடிய உடல் உழைப்பை மட்டுமே முன்னெடுக்க வேண்டும். உடற்பயிற்சி செய்பவர்கள் மாலை நேரங்களில் நிழலான இடங்களில் உடற்பயிற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.

அத்துடன் அடிக்கடி உடற்பயிற்சி செய்வதை குறைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளையும் சிறுவர்களையும் வெட்டவெளியில் விளையாட அனுமதிக்கக்கூடாது. அவர்களை குளி ரூட்டப்பட்ட அறையில் அல்லது மின்விசிறியின் கீழ் இருக்கச் செய்ய வேண்டும்.

பருத்தியிலான ஆடைகளை அணியும் அதேநேரம் குறைவான ஆடைகளையே அணிய வேண்டும். நேரடி வெயிலுக்குச் செல்லும்போது தொப்பி அல்லது குடையை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். சூடான பானங்களையும் உணவுகளையும் தவிர்க்கும் அதேநேரம் அதிக குளிர்ச்சியான இனிப்பான பானங்கள் அருந்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

Sun, 03/29/2020 - 09:43


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை