சம்மாந்துறை எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் சம்பியன்

அக்கரைப்பற்று நோ நேம் விளையாட்டுக் கழகம் நடாத்திய 'நோ நேம் ரீ10 பிளாஸ்ட் நிதஹஸ் கிண்ண 2020' கடின பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சம்மாந்துறை எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

அக்கரைப்பற்று சார்ப் கிட்ஸ் மற்றும் என். ஜே மெறின் பிறைவட் லிமிட்டெட் அனுசரணையில் அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுத் தொடரில் இறுதிப் போட்டியில் சம்மாந்துறை எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகமும், அக்கரைப்பற்று ஸ்பார்டன் விளையாட்டுக் கழகமும் தெரிவானது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சம்மாந்துறை எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடியது. இவ் அணி முதல் 10 ஓவர்களின் முடிவில் 07 விக்கெட்டுகளை இழந்து 92 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அணியின் தலைவர் இஸ்மத் 44 ஓட்டங்களையும், இர்சாத் 15 ஓட்டங்களையும் அணிக்காக கூடுதலாக பெற்றுக் கொடுத்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அக்கரைப்பற்று ஸ்பார்டன் அணி 09 விக்கெட்டுகளை இழந்து 90 ஓட்டங்களைப் பெற்றனர். ஸ்பார்டன் அணி சார்பாக தலைவர் நிலாஸ் 43 ஓட்டங்களையும், மஸ்ஊத் 23 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். இப் போட்டியில் 03 ஓட்டங்களினால் அக்கரைப்பற்று ஸ்பார்டன் அணியை சம்மாந்துறை எஸ்.எஸ்.சி அணி வென்று 'நோ நேம் ரீ10 பிளாஸ்ட் நிதஹஸ் 2020' கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது. இறுதி நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அஹமட் ஸகி சம்பியன் அணிக்கான கிண்ணத்தையும், ரன்னர்அப் ஆக தெரிவான ஸ்பார்டன் அணிக்கான கிண்ணத்தை நோ நேம் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஆசிரியர் ஏ.ஜே.பௌசான் ஆகியோர் வழங்கி வைத்தார்கள்.

(அக்கரைப்பற்று மத்திய நிருபர்)

Thu, 02/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை