பங்களாதேஷ் விலைமாதுக்கு கெளரவமான இறுதிச் சடங்கு

பங்களாதேஷில் நீண்டகாலமாக நீடித்து வந்த தடையை மீறி பாலியல் தொழிலாளி ஒருவருக்கு முதல் முறை இஸ்லாமிய முறைப்படி இறுதிச் சடங்கு செய்யப்பட்டுள்ளது.

தவுலத் தியாவில் இருக்கும் உலகின் மிகப்பெரிய விபச்சார விடுதி ஒன்றில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 65 வயதான ஹமீதா பேகம் என்ற பெண் கடந்த வாரம் சுகவீனம் காரணமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரது இறுதிச் சடங்கில் பலரும் பங்கேற்றுள்ளனர்.

முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட பங்களாதேஷில் பாலியல் தொழில் சட்டபூர்வமானது என்றபோதும் இவர்களுக்காக இறுதிப் பிரார்தனையில் ஈடுபடுவதற்கு இஸ்லாமிய தலைவர்கள் மறுத்து வந்தனர்.

இவ்வாறான பாலியல் தொழிலாளிகள் உயிரிழந்தபின் வழக்கமாக அவர்களின் உடல் மத ரீதியாக இறுதிச் சடங்குகள் இல்லாமல் அடையாளங்கள் இன்றி புதைக்கப்படுவது அல்லது ஆற்றிம் எறியப்படும் நிலையே நீடித்து வந்தது. இந்நிலையில் பொலிஸாரின் தலையீட்டுடன் பேகமின் இறுதிக் கிரியைகளை மத அனுஷ்டானங்களுடன் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Fri, 02/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை