கனேரியா தீவுகளை மூடிய சஹாரா பாலைவனப் புழுதி

சஹாரா பாலைவனத்தில் இருந்து சிவப்பு தூசியை எடுத்து வந்த புழுதிப் புயல் ஸ்பெயினின் கனேரியா தீவுகளை போர்த்தியதால் விமானப் போக்குவரத்துகள் ஸ்தம்பித்துள்ளன.

இந்த தீவுக்கான அனைத்து விமான பயணங்களும் கடந்த ஞாயிறன்று திசை திருப்பப்பட்டு, இடைநிறுத்தப்பட்டு அல்லது ரத்துச் செய்யப்பட்டுள்ளன. எனினும் நேற்றைய தினம் நிலைமை சற்று சீரடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சஹாரா பாலைவனத்தில் இருந்து மணல் புழுதி சுமார் 500 கிலோமீற்றர் தூரம் அட்லாண்டிக் கடலைக் கடந்து இந்த தீவை தாக்கியுள்ளது. இதனால் அங்கு சுற்றுச்சூழலை பார்க்க முடியாத அளவுக்கு புழுதி படர்ந்துள்ளது. பொதுமக்கள் வீடுகளில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் நூற்றுக்கணக்காக சுற்றுலாப் பயணிகளும் நிர்க்கதியாகியுள்ளனர்.

Tue, 02/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை