சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள்

மக்கள் மத்தியில் விழிப்புணர்வு அவசியம் 

சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அமுல்படுத்தப்படுத்தி,இவற்றைத் தடுக்க மக்கள் மத்தியில் பாரிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென அமைச்சரும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். 

27/2 கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று சபையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவரது கேள்வியில், 

கடந்த வெள்ளிக்கிழமை கற்பழிப்புகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பிலான அறிக்கையொன்று அரசாங்கத்தால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இதேவேளை, 2020ஆம் ஆண்டின் முதல் 20 நாட்களில் மாத்திரம் 140 கற்பழிப்புகளும், 41 சிறுவர் துஷ்பிரயோகங்களும் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இவற்றில் சில முறைப்பாடுகள் தொடர்பில்தான் விசாரணைகள் இறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போதும் 2019ஆம் ஆண்டில் கற்பழிப்புகள் 107.6 சதவீதத்தாலும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் 26 சதவீதத்தாலும் வீழ்ச்சி அடைந்துள்ளன. எனினும் 2020ஆம் ஆண்டின் முதல் 20 நாட்களில்,இதில் பாரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இவற்றை தடுக்க அரசாங்கம் விசேட செயற்றிட்டங்கள் ஏதும் வகுத்துள்ளதா? சம்பவங்களுக்கான தண்டனையை அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறதா எனக் கேள்வியெழுப்பியிருந்தார். 

இதற்கு பதிலளித்த அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான ஷமல் ராஜபக்ஷ, 

2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2019ஆம் ஆண்டின் புள்ளி விபரங்களை பகுப்பாய்வு செய்தால், குற்றங்கள் குறைந்துள்ளமையை அவதானிக்க முடிகிறது. 2018ஆம் ஆண்டில் 253 கற்பழிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ள போதிலும் 2019இல் 183 சம்பவங்களே பதிவாகியுள்ளன. 

இத்தகைய குற்றச்செயல்களை தடுக்க 498 பொலிஸ் பிரிவுகள் நாடாளாவிய ரீதியில் செயற்படுகின்றன. அவற்றின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பயிற்சி பெற்ற உத்தியோகர்களும் தெடார்ந்து இணைக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கு மேலதிகமாக சில அரச நிறுவனங்களும் இவற்றை தடுக்கச் செயற்படுகின்றன.  

பாடசாலை மாணவர்கள்,பெற்றோர்,சமூகக் குழுக்கள் எனப் பலரும் இவர்களை அடையாளம் கண்டு விழிப்புணர்வு செய்யப்படுகின்றனர்.

பெண்கள், சிறுவர்கள் துஷ்பிரயோகங்கள் பொருளாதார காரணிக ளுக்காகவும் இடம்பெறுகின்றன. சில மாதங்களில் இக்குற்றச்செயல்கள் அதிகரிப்பதுடன்.சில மாதங்களில் குறைவடையவும் செய்கின்றன. 

ஷம்ஸ் பாஹிம்,சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 02/20/2020 - 11:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை