அடிமைத்தளையிலிருந்து விடுபடும் போராட்டம் இன்னும் முடியவில்லை

அடிமையில்லாத தேசத்தை உருவாக்குவதற்கான போராட்டம் இன்னமும் நிறைவுபெறவில்லை எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இன,மத, மொழி, குலபேதங்களை கடந்து ஒன்றுபடுவதன் மூலமே இப்போராட்டத்தை வெற்றிகொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார்.

இலங்கையின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள செய்தியில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது:

இன,மத,மொழி,அரசியல் பேதங்களை மறந்து எமது மூதாதையர்கள் ஒன்றுபட்டு குரல் கொடுத்ததாலே சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. அந்த போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நாடு மரியாதை செலுத்துகின்றது. அனைத்து முரண்பாடுக ளையும் புறந்தள்ளி ஒன்றுபட்டதாலே, அந்நியரின் ஆக்கிரமிப்பிலிருந்து நாம், மீண்டெழுந்தோம்.

இதனால் இன்று பெருமையுடன் நாட்டின் 72 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாட முடிந்துள்ளது.

சுதந்திரப் போரில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் தீரச் செயல்களுக்கு மரியாதை செலுத்தும் இன்றைய தினத்தில்,எமது தலைவர்கள் காட்டிச்சென்ற ஒன்றுமைப் பயணத்தை, நாம் கைவிட்டிருப்பது கசப்பான அனுபவமாகும்.உலகுக்கே முன்மாதிரியாகத் திகழ்ந்த நாம் இன்று சந்தர்ப்பவாத அரசியலுக்குள் சிக்கியுள்ளோம்.

அனைத்து இன மக்களும் ஒன்றாகக் கைகோர்க்க வேண்டிய நேரமும் இதுவாகும்.

எனவே இன்றுமுதல் அந்த ஒற்றுமைப் பயணத்துக்கு அனைவரும் உறுதிகொள்வோம் எனவும் அந்தச் செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

எம்.ஏ.எம். நிலாம்

Wed, 02/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை