பூமியை வலம் வருகின்ற சிறு நிலவு கண்டுபிடிப்பு

எமது பூமியை வலம் வரும் ஒரு கார் வண்டியின் அளவான சிறிய நிலவு ஒன்றை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நாசா நிதியில் உருவாக்கப்பட்ட அரிசோனாவில் இருக்கும் வானியல் காண்காணிப்பகத்தில் கடந்த பெப்ரவரி 15 ஆம் திகதி பூமியின் இந்த சிறிய நிலவு அவதானிக்கப்பட்டுள்ளது. இது 6 தொடக்கம் 11 அடி விட்டம் கொண்டதாகும். இதற்கு 2020 சி.டி3 என பெயரிடப்பட்டுள்ளது.

பூமிக்கு தற்காலிகமான சிறிய நிலவு ஒன்று கிடைத்துள்ளது மிகப்பெரிய செய்தியாகும் என்று அதனைக் கண்டுபிடித்த கக்பர் விர்ஸ்சோஸ் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு ‘சி’ வகை குறுங்கோளாகும். பூமியை வலம் வரும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது குறுங்கோளாக இது உள்ளது. இதே வானியல் கண்காணிப்பகத்தில் இதற்கு முன்னர் 2006ஆர்.எச்.120 என்ற குறுங்கோள் பூமியை சுற்றிவருவது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்தக் குறுங்கோள் மூன்று ஆண்டுகளுக்கு முன் பூமியில் வளிமண்டலத்திற்குள் நுழைந்து அழிந்ததாக நம்பப்படுகிறது.

Fri, 02/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை