பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பங்கேற்புடன் ஆரம்பம்

31 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா

வடக்கு, கிழக்கு, மலையக வீரர்கள் பங்கேற்பு

தேசிய இளைஞர் சேவை தேசிய விளையாட்டு நிகழ்வுகள் மூலம் தேசிய ரீதியில் இளைஞர்களின் விளையாட்டு திறமைகளை வெளிக்கொணரும் அரிய வாய்ப்பு உருவாகுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய இளைஞர் மன்ற விளையாட்டு விழா கடந்த 27 அநுராதபுரத்தில் நடைபெற்ற ஆரம்ப வைபவத்தின்போது கலந்து கொண்டு இவ்வாறு உரையாற்றினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்: விளையாட்டுத் துறையில் நல்ல ஆற்றலும் திறமையும் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு நல்லதொரு வாய்ப்பாக தேசிய மட்டம் வரைக்கும் செல்வதற்கான திறமையுள்ள விளையாட்டு வீர, வீராங்கனைகளை இவ்வாறான தேசிய விளையாட்டுக்கள் மூலம் அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு உருவாகின்றன.தேசிய மட்டத்தில் உருவாகும் இவ்வாறான வீர,வீராங்கனைகளுக்கு சர்வதேச மட்டத்தில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பற்றும் வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கின்றன.இதனால் இவ்வாறான துறையில் ஆற்றல் உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது என்றார்.

இலங்கையின் 31ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா வட மத்திய மாகாண விளையாட்டு மைதான தொகுதியில் ஆரம்பமாகியது.இலங்கையின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவ படுத்தும் வகையில் சுமார் 3000 விளையாட்டு வீர,வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இவ் ஆரம்ப விளையாட்டு நிகழ்வுக்கு வட மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண,இளைஞர் விவகார ராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க,தேசிய இளைஞர் சேவைகள் மன்ற தலைவர் துசார ஜயசிங்க உட்பட மற்றும் பலரும் இங்கு சமூகமளித்திருந்தனர்.

இவ் விளையாட்டு விழா இம்மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் மார்ச் 01 ஆம் திகதி வரை அநுராதபுரம் வட மத்திய மாகாண விளையாட்டு மைதானத்தில் இடம் பெறுகிறது.

Sat, 02/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை