கிளிநொச்சி குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் புகுந்து அட்டகாசம்

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் விநாயகர் குடியிருப்பு பகுதிக்குள் நேற்று அதிகாலை புகுந்த காட்டுயானைகள் பெருமளவான தென்னை மரங்களையும் ஏனைய பயிர்களையும் அழித்து நாசம் செய்துள்ளன.

குறித்த பகுதியில் மக்கள் உறக்கத்தில் இருந்தவேளை காட்டுயானைகள் புகுந்து வாழ்வாதாரப் பயிர்களை தென்னை மரங்களையும் வாழைபோன்ற ஏனைய பயிர்களையும் அழித்துள்ளன.

இவ்வாறு அதிகாலைவேளை யானை புகுந்து பயிர்களை அழித்தபோது மக்கள் சத்தமிட்டு யானைகளை விரட்டியுள்ளதுடன் இதுவரை காலமும் யானைத்தாக்கத்தை ஏற்படுத்தாத குறித்த பகுதியில் யானைககளால் அழிவுகள் ஏற்பட்டுள்ளதுடன் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். தமது பகுதிக்கு யானைவேலிகளை அமைத்து தமது வாழ்வாதாரச்செய்கைகளை பாதுகாத்து கொள்ள வழிவகைகளை செய்து தருமாறு இப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.

 (பரந்தன் குறூப்நிருபர்)

Fri, 02/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை