மணல் அகழ்வுக்கு எவருடைய பெயர் பட்டியலும் வழங்கவில்லை

இராஜாங்க அமைச்சர்

மணல் பெறுவதற்கு அனுமதிப்பத்திரம் வழங்குமாறு யாருக்கும் நான் பெயர் பட்டியல் வழங்கவில்லையென சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை இராஜாங்க அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் மணல் அகழ்வது தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்று கந்தளாயில் நேற்று (25) நடைபெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும்,இராஜங்க அமைச்சர் என்ற வகையிலும் 120 பேருக்கு மணல் ஏற்றுவதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குமாறு திருகோணமலை வனவள பாதுகாப்பு அதிகாரி ஜெயக்குமாரிடமோ,வேறு திணைக்களத்திற்கோ நான் பெயர் பட்டியல் அனுப்பவுமில்லை,யாரிடமும் எதுவும் கேட்கமில்லை,வேறு அமைச்சர் ஒருவரின் செயற்பாடே இதுவென தெரிவித்தார்.

கடந்த வருடம் 168 பேருக்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான ஏற்பாடுகள்தான் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இந்த சமயத்தில் தான் மேலும் 120 பேருக்கு அனுமதிப்பத்திரம் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. இதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.

சட்டவிரோத செயற்பாடுகளுக்கு நான் ஒரு போதும் உடந்தையாக இருக்க மாட்டேன் என்றார்.

கந்தளாய் தினகரன் நிருபர்

Wed, 02/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை