புர்கினாவில் ஆயுததாரிகளின் தாக்குதலில் இருபது பேர் பலி

வடமேற்கு புர்கினா பாசோவில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் 20 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

தலைநகர் அவுகடெளகுவின் வடக்காக கிராமம் ஒன்றில் மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆயுததாரிகளே கடந்த சனிக்கிழமை இரவு இந்தத் தாக்குதலை நடத்தி இருப்பதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சில்கசி நகரில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதல் ஒன்றில் 39 பேர் கொல்லப்பட்ட சம்பவம் இடம்பெற்று ஒரு வாரத்தின் பின்னரே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆபிரிக்காவின் சஹல் பிராந்தியத்தில் ஜிஹாதிக்களின் வன்முறை அண்மைய மாதங்களில் அதிகரித்துள்ளது.

2012 ஆம் ஆண்டு பிரிவினைவாதிகள் மற்றும் இஸ்லாமிய போராளிகளின் கூட்டணி வடக்கு மாலியை கைப்பற்றியதைத் தொடர்ந்தே சஹல் பிராந்தியத்தில் பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டது. இதற்கு எதிராக பிரான்ஸ் இராணுவத் தலையீட்டை மேற்கொண்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட அமைதி உடன்படிக்கை அமுல்படுத்தப்படாத நிலையில் புதிய போராட்டக் குழுக்கள் தோன்றி மத்திய மாலி, புர்கினா பாசோ மற்றும் நைகரில் தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளது.

Tue, 02/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை