பாரம்பரிய பொறுப்புக்களை சுதந்திர தினத்தில் வெளிப்படுத்துவோம்

இராமகிருஷ்ண மிஷன் துணைத் தலைவர்

இலங்கை பிரஜைகளாகிய நாம் 72 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இத்தருணம் அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்குவதாக,இராமகிருஷ்ண மிசன் துணைத் தலைவர்,சுவாமி அக்ஷரத்மாநந்தா தெரிவித்துள்ளார்.அச்செய்தியில் அவர் தெரிவித்துள் ளதாவது:

பல நூற்றாண்டுகளாக வெளிநாட்டு ஆக்கிரமிப்பின் கீழ் நாம் அடிமைப்படுத்தப்பட்டிருந்தோம். எமது வளமான கலாசார பாரம்பரியத்தையும் இது அபகரித்தது. சுதந்திரம் என்பது வளர்ச்சியை முன்னிலைப்படுத்துவதாகும். வெளிநாட்டவர்களின் ஆக்கிரமிப்பின்போது எமது அபிவிருத்திகள் தடைப்பட்டன. தற்போது சுதந்திரத்துடன் பொருளாதாரம், கலாசாரம் மற்றும் கல்வி போன்ற பல துறைகளில் வேகமாக நாம் வளர்ச்சிகண்டு வருகின்றோம்.  

 சுதந்திரத்தைப் பெறுவதற்காக அளப்பரிய பங்காற்றிய முன்னோர்களின்  தியாகங்களுக்காக நாம் மரியாதை செலுத்த வேண்டும். சுதந்திரம் என்பது பொறுப்புடைமையை வலியுறுத்துகின்றது. இதில் எமக்கான பொறுப்புக்களை நாம் நிறைவேற்றுவது அவசியமாகும். எமது வளர்ச்சிக்கான திறனாற்றல் மற்றும் வலிமை தொடர்பில் எமக்கு உறுதியான நம்பிக்கை இருக்க வேண்டும்.  

 மக்களின் ஜனநாயக வளர்ச்சியை மேலும் மேம்படுத் துவதற்கும், அரசியல் ஒற்றுமை மற்றும் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தவும் இச்சந்தர்ப்பத்தில் நாம் உதவ வேண்டும்.  

பௌத்தர்களாக இருந்தாலும் சரி இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் அல்லது வேறு எந்த மதத்தினராக இருந்தாலும் சரி, நமது வரலாற்று பின்னணியில் வேறுபாடுகள் இருந்தாலும் சரி இவை அனைத்தும் நமது ஜனநாயக தேசிய ஒற்றுமை மற்றும் ஐக்கியம் பற்றிய விழிப்புணர்வால் கட்டி எழுப்பப்பட வேண்டும். 

அரசாங்கத்தின் கடின உழைப்பு, பொது மக்களின் ஒத்துழைப்பு மற்றும் அனைத்து இயற்கை வளங்களையும் கொண்ட இந்த ஆழமான இலங்கைத் தீபகம் சர்வதேச அரங்கில் மிக உயர்பீடத்தின் ஒரு பகுதியாக முன்னிலைப்படுத்தப்படும்.  

மகிழ்ச்சியான இச் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மற்றும்  அமைச்சரவை உறுப்பினர்கள், இலங்கை மக்கள் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சியுடனான வாழ்வு கிட்ட, இறைவனைப்  பிரார்த்திப்போம்

Tue, 02/04/2020 - 09:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை