பாதுகாப்பு சபையில் டிரம்பின் திட்டத்தை சாடிய அப்பாஸ்

ஐ.நா பாதுகாப்புச் சபையில் கடந்த செவ்வாய்க்கிழமை தோன்றிய பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மத்திய கிழக்கு அமைதித் திட்டத்தை நிராகரித்தார். அது இஸ்ரேலுக்கான பரிசு என்றும் பலஸ்தீனர்களால் ஏற்க முடியாது என்றும் சாடினார்.

அமெரிக்காவின் திட்டத்தின் வரைபடத்தை அசைத்தவாறே, பலஸ்தீனர்களுக்கு செதுக்கப்படும் நாடு “சுவிஸ் சீஸ்” துண்டு போன்று இருப்பதாக அப்பாஸ் இதன்போது தெரிவித்தார்.

டிரம்பின் திட்டத்தை விமர்சித்து துனீஷா மற்றும் இந்தோனோசியாவால் பாதுகாப்புச் சபையில் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டபோதும் அமெரிக்காவின் வீட்டோ அதிகாரம் காரணமாக அது வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை.

கடந்த ஜனவரி 28 ஆம் திகதி டிரம்ப் வெளியிட்ட அமைதித் திட்டத்தில் மேற்குக் கரையில் இருக்கும் யூதக் குடியேற்றங்களை இஸ்ரேலிய நிர்வாகத்திற்குள் இணைப்பதை அங்கீகரிப்பதோடு பலஸ்தீன நாடு ஒன்றை உருவாக்குவதற்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

“இப்படியான நாட்டைத்தான் அவர்கள் எமக்குத் தரப்போகிறார்கள். உண்மையில் சுவிஸ் சீஸ் துண்டு போல் இருக்கிறது. இவ்வாறான ஒரு நாட்டை உங்களில் யார் ஏற்பீர்கள்?” என்ற அப்பாஸ் கேள்வி எழுப்பினார்.

Thu, 02/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை